பயங்கரவாதத்தை முறியடித்தவர்களை நல்லாட்சி அரசாங்கம் தண்டிக்கிறது: நாமல்

நாட்டில் பயங்கரவாதத்தை முறியடிக்க உதவியர்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் தண்டனை வழங்கி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேரில் சென்று இன்று (சனிக்கிழமை) சந்தித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

“பிள்ளையான் பயங்கரவாதியாக இருந்து பின்னர் நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாமல் ஒழிக்க உதவிகளை வழங்கியவர். இருப்பினும் நல்லாட்சி அரசாங்கம் அவரை 3 வருடங்களாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளது.

இருப்பினும் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் வெற்றியை பெற்றுக்கொடுப்பதற்கு முழு ஆதரவினையும் வழங்கியமையால் தான் அவரை நேரில் சென்று சந்திக்கின்றோம்.

இந்த அரசாங்கத்துக்கு பிள்ளையானை மட்டுமல்ல யுத்த வெற்றிக்கு காரணமான அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோரை சிறைக்கு அனுப்பி அதனூடாக அரசியல் செய்ய பார்க்கின்றது.

அத்துடன் அரசாங்கத்துக்கு எதிராக குரல் எழுப்புகின்ற எல்லோரையும் சிறைக்கு அனுப்புவதுடன், நீதித்துறையும் சுதந்திரமற்ற முறையிலேயே காணப்படுகின்றது.

மேலும் அரசாங்கம் என்ன நினைக்கின்றதோ அதை மாத்திரமே செய்கின்றது. இங்கு வேறு எவரின் கருத்துக்களுக்கும் மரியாதை இல்லை” என நாமல் விசனம் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி