மக்களின் பிரச்சனைக்குரிய தீர்வை காணாது பூசி மெழுகும் கூட்டமைப்பு!!

தமிழ் தலைவர்களை நம்பி மக்கள் வாக்களித்து வருகின்றார்களாயினும், கூட்டமைப்பினர் மக்களின் பிரச்சனைக்குரிய தீர்வை இன்னும் பெற்றுக் கொடுக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்ற இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர் ,

“தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து என்னை விலக்குவதற்கு திட்டமிட்டு எனக்குச் சதி செய்தார்கள். அதன்படி கூட்டமைப்பிலிருந்து விலகுவதற்குரிய முடிவை நானே எடுத்தேன்.

தற்போது நான் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் சிரேஸ்ட உப தலைவராகவும், கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஆரம்பகால உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றேன்.

எதிர்காலத்தில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் கோரிக்கைக்கு அமைய அந்த அணியில் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என பல கட்சிகள் முன் வந்துள்ளார்கள்.

இதன்படி, வருகின்ற அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணத்து எதிர்வருகின்ற தேர்தலில் அதனூடாகப் போட்டியிடவுள்ளேன். தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்தை மிக நீண்டகாலமாக தெரிவித்து வருகின்றேன்.

அகில இலங்கை ரீதியில் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் தலைமையில் ஒன்றுபட வேண்டும் என கடந்த காலத்தில் தெரிவித்திருந்தேன்.

தேசியம் மலரவேண்டும், தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற நோக்குடன்தான் 1965ம் ஆண்டிலிருந்து தமிழ் தேசியத்திற்காக பாடுபட்டு வந்தேன்.

ஆனால் ஒருசிலர் தங்களது சுயலாபத்திற்காக மக்களைக் கூறுபோடுபவர்களாக செயற்பட்டு வருவதானது மரத்தால் விழுந்தவனை மாடு மிதிக்கும் செயலாகும் என நான் நினைக்கின்றேன்.

தமிழ் தலைவர்களை நம்பி, எமது தமிழ் மக்கள் வாக்களித்து வருகின்றார்கள். மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் பிரச்சனைக்குரிய தீர்வை 2016 இல் பெற்றுத்தருவோம், 2017 இல் பெற்றுத் தருவோம், 2018 இலே பெற்றுத்தருவோம், தீபாவளிக்குப் பெற்றுத் தருவோம், தைப்பொங்கலுக்குப் பெற்றுத்தருவோம், என்றார்கள்.

ஆனால் சில தினங்களுக்கு முன்னர் தமிழ் தலைமைகள் நம்பியிருக்கின்ற ஜனாதிபதி ஜெனிவா சென்று எமது நாடு சுதந்திர நாடு, எமது நாட்டுப் பிரச்சினையில் எவரும் தலையீடு செய்யக்கூடாது. உள்நாட்டுப் பிரச்சினையை நாங்களே தீர்த்துக்கொள்வோம் என்று தெரிவித்த பின்னரும், உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன எனத் தெரிவித்து தமிழ் மக்களிடத்தில் வாக்குக் கேட்காமல் தமிழ் மக்களை வாழ்வு வளம்பெற, வளர்ச்சிபெறச் செய்வதற்கு தமிழ் இனத்தைச் சேர்ந்த அனைவரும் ஓரணியில் திகழவேண்டும்.

தேசியம் பேசிப் பேசி இனத்தையும், மதத்தையும், மக்களையும் தேய்த்துவிட்டோம், மாற்றினத்தை வாழவைத்த தெய்வங்களாக வாழாது நாங்களும் தன்மானத் தமிழர்களாக வாழ்வதற்கு வழிசமைக்க வேண்டும் என வேண்டுகின்றேன்.

நல்லாட்சி அரசாங்கத்தில் சிறையில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைத்திகளை விடுதலை செய்வோம், காணிகளை மீட்டுத் தருவோம் என தமிழ் தலைமைகள் தெரிவித்திருந்தார்கள்.

இவர்களின் வார்த்தைகளைக் கேட்டு தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்தார்களே தவிர வேறு ஒன்றும் ஆனதில்லை.

இந்த நாட்டிலே பெரும் கிளர்ச்சியைச் செய்த ஜே.வி.பி யினருக்கும், நாடாளுமன்றத்திற்கு குண்டு வைத்து தகர்ப்போம் என தெரிவித்த பொரும்பான்னை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மன்னிப்பு வளங்க முடியுமாக இருந்தால், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகலா மகேஸ்வரன் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்களுக்காக வேண்டி அவரது அமைச்சுப் பதவி இழக்கப்பட்டு, அச்சுறுத்தலும் இடம்பெற்றன.

இது எந்த வகையில் நியாயம். அவர் ஒரு தமிழ் பெண் என்பதற்காகவா? இது நடைபெற்றது என்பதை இந்த நல்லாட்சி அரசிடன் கேட்க விரும்புகின்றேன்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை இன்னும் தரமுயர்த்தாமலிருப்பது வேதனைக்குரிய விடையமாகும். இதற்குத் தடைபோடுபவர்களைத் தகர்த்தெறிய தமிழ் தலைமைத்துவம் இல்லாமலுள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி