பிரதம நீதியரசராக பரிந்துரைக்கப்பட்ட சட்டமா அதிபர்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள செல்லும் முன்னர் தற்போதைய சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவை அடுத்த பிரதம நீதியரசராக பரிந்துரைத்து விட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய பிரதம நீதியரசர் பியசாத் டெப் அடுத்த ஒக்டோபர் மாதம் ஓய்வுபெறவுள்ளார். எவ்வாறாயினும் பிரதம நீதியரசர் பியசாத் டெப் வெளிநாடுகளுக்கு சென்ற நேரங்களில் பதில் பிரதம நீதியரசராக சிரேஷ்ட நீதியரசரான ஈவா வனசுந்திரவே பணியாற்றி வந்துள்ளார்.

ஈவா வனசுந்தரவுக்கு அடுத்த சிரேஷ்ட நிலையில் புவனேக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, சிசிர ஆப்ரூ ஆகிய நீதியரசர்கள் உள்ளனர்.

அதவேளை தற்போதைய சட்டமா அதிபர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட பின்னர், சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகிக்கும் தப்புல டி லிவேரா, சட்டமா அதிபராக நியமிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய பிரதம நீதியரசராக நியமிக்கப்பட உள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு அண்மையில் எதிர்வு கூறியிருந்தார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி