ஜெனீவாவில் இடம்பெறும் தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் கண்காட்சி ஊர்திப்பயணம்!

பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம் நான்காவது நாளான நேற்று இரவு பெல்ஜியம் நாட்டை வந்தடைந்துள்ளது.

பாரிஸ் மாநகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம் இரண்டாவது நாளாக நேற்று பல்வேறு மாநகர சபைகளில் சந்திப்புகளையும், மனுக்கையளிப்பையும் மேற்கொண்டு ஐரோப்பிய பாராளுமன்றத்தை நோக்கி செல்கிறது.

குறித்த மனித நேய ஈருருளிப் பயணங்கள் சென்ற வழிகளில் வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்பு தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டதோடு, துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை எதிர்வரும் ஒன்பதாம் திகதி நோர்வே பாராளுமன்றத்திற்கு முன்பாக ஐ.நா நோக்கிய தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் கண்காட்சி ஊர்திப்பயணம் ஆரம்பமாகவுள்ளது.

இந்த பயணம் சுவீடன், டென்மார்க், யேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் தலைநகரங்களை ஊடறுத்து இறுதியாக ஜெனீவா மாநகரத்தை சென்றடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே சந்தர்ப்பத்தில் ஐ.நா மனிதவுரிமை பேரவையின் அமர்வை முன்னிட்டு எதிர்வரும் 17ஆம் திகதி ஜெனிவா மாநகரத்தில் நடைபெறும் மாபெரும் பொங்கு தமிழ் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு மனித நேய பணியாளர்கள் கோரியுள்ளனர்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி