விரக்தியில் புதுப்பெண் தற்கொலை! நடந்தது என்ன தெரியுமா?

தனது கணவர் தனிக்குடுத்தனம் வர மறுத்ததால் மனவேதனையில் இளம்பெண்ணொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவமொன்று கடலூரில் இடம்பெற்றுள்ளது.தமிழகம்- கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் மாலதி(32). இவருக்கும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ரவிசங்கர்(35) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த பின்னர் மாலதி தனது கணவர், மாமனார், மாமியாருடன் சென்னையில் வசித்து வந்தார்.

மாலதி ரவிசங்கரிடம் தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென வற்புறுத்தி வந்துள்ளார்.

இதற்கு ரவிசங்கர் ஒத்துக்கொள்ளவில்லை.

இதனால் மாலதி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

வீட்டிற்கு சென்ற மாலதி மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார்.

இந்நிலையில் வீட்டில் யாருமில்லா நேரத்தில் மாலதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர், மாலதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

திருமணமாக 5 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி