பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ள வட பிராந்திய இ.போ.ச தொழிற்சங்கம்!!

தமது கோரிக்கைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கத் தவறினால் 14 நாட்களுக்கு பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக வட பிராந்திய இ.போ.ச இணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும், இந்த வருடம் 01.01.2018 தொடக்கம் 05.01.2018 வரையான காலப்பகுதியில் இ.போ.ச வட பிராந்திய இணைந்த தொழிற்சங்கத்தால் நடத்தப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பின் முடிவில் எங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஆனால் எங்களுடைய கோரிக்கைகளுக்கு அமைவாக இன்றுவரை புதிய பேருந்து நிலையத்தில் சுதந்திரமாகவும், சுயமாகவும் செயலாற்ற முடியாதவாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா நிர்வாகத்தினர் பல தடைகளை ஏற்படுத்தி தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு ஆதரவாக எமக்கு எதிராக சில பொலிஸ் உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் பொய்யான குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்கின்றனர்.

இதனால் இ.போ.சவை முடக்க முனைகின்றார்கள். இ.போ.சவிற்குத் தரப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் எமது தலைமைக் காரியாலயத்தின் கீழுள்ள நிர்வாகத்தை நாம் எதிர்பார்க்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி