திரு சின்னையா சிவானந்தன்திரு சின்னையா சிவானந்தன்
(சிவா அண்ணா- சென்ரல் எசென்ஸ்- கண்டி)
பிறப்பு : 15 யூலை 1956 — இறப்பு : 30 ஓகஸ்ட் 2018

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கண்டியை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா சிவானந்தன் அவர்கள் 30-08-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா நாகமுத்து(ரத்தினம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துச்சாமி சற்குணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற யோகேஸ்வரி(குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவானுஜன்(சென்ரல் எசென்ஸ்- கண்டி), சிவாஜினி(Penquin Garments) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பராசக்தி, காலஞ்சென்றவர்களான ஏரம்பமூர்த்தி, சிவபாதசுந்தரம் மற்றும் கமலாதேவி, திருநாவுக்கரசு, பரமானந்தன், அருளானந்தன், நித்தியானந்தன், உமாதேவி, சதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதந்திராதேவி, ரோகினிதேவி, கந்தவேள்(Pettah Essence Suppliers), சோமஸ்கந்தா(Pettah Essence Suppliers), சரோஜினிதேவி, சசிகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இல:46 பகிரவகந்த லேன், கண்டி. எனும் முகவரியில்  உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 02-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் மாகியாவ பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.46 பகிரவகந்த லேன்,
கண்டி.

தகவல்
சிவானுஜன்(மகன்)
தொடர்புகளுக்கு

- — இலங்கை
செல்லிடப்பேசி: +94776009110

சின்னையா பரமானந்தன்(சகோதரர்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915755676234
செல்லிடப்பேசி: +492403555306

சின்னையா திருநாவுக்கரசு(சகோதரர்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +492414008854
Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி