செம்மணி படுகொலை நினைவேந்தலுக்கு அழைப்பு !

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.கடந்த 1996ஆம் ஆண்டு செப்டெம்பர் 7ஆம் திகதி க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த கிருஷாந்தி, இராணுவத்தால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கிருஷாந்தியை தேடிச் சென்ற பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் அயல்வீட்டாரும் படுகொலை செய்யப்பட்டு செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டமை பின் நாட்களில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து இராணுவ சிப்பாய்கள் சிலர் கைதுசெய்யப்பட்டு, ஒருவருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி