வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து! இருவர் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை - கந்தளாய் 97ம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, விபத்தில் படுகாயமடைந்த இருவரும் தம்பலகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிகளை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், குறித்த விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி