மின் கட்டணத்திற்கும் விலை சூத்திரம் – நிதி அமைச்சர்

மின் கட்டணத்திற்கும் விலைச்சூத்திரமொன்றை உருவாக்குவதற்குரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறை பௌத்த கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் இன்று(சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சர்வதேச நாணய நிதியம் கூறும் விடயங்களை நாம் மேற்கொள்வதில்லை.

மின் கட்டணத்திற்கு விலைச்சூத்திரமொன்றை உருவாக்க வேண்டும் என அரசாங்கம் என்ற ரீதியில் கடந்த காலங்களில் நாம் ஏற்றுள்ளோம். விலைச்சூத்திரத்தை தயாரிக்க விசேட குழுவொன்றை அமைக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.

இது சர்வதேச நாணய நிதியத்தின் யோசனை அல்ல. இலங்கையின் யோசனையாகும். எதிர்காலத்தில் எரிபொருளின் விலை 81 டொலர் வரை அதிகரிக்கக்கூடும்.

இவை அனைத்தையும் அரசாங்கத்தினால் தனியாக தாங்கிக்கொள்ள முடியாது. உடனடியாக செய்யப்போவதில்லை. இன்னும் இரண்டு வருடங்கள் சென்றாவது விலைச்சூத்திரத்திற்கு செல்ல வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி