உலகத்தில் ஏற்படவுள்ள பேரழிவை தடுக்க இன்னும் 10 ஆண்டுகளே!!

பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பேரழிவை தடுக்க இன்னும் 10 ஆண்டுகளே உள்ளதாக ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது.

உலகம் எங்கும் பசுமை இல்லா வாயுக்களின் வெளியேற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம், பெருகி வரும் தொழில் வளர்ச்சி தான் என்று கூறப்படுகிறது.

புவியின் வெப்பநிலை அதிகரித்து வருவதால் உலக நாடுகள் அனைத்து தற்போது எதிர்வினைகளை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையானது உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, இன்னும் 10 ஆண்டுகளில் புவி வெப்பமடைவதை கட்டுப்படுத்தவில்லை என்றால், உலகம் பேரழிவை சந்திக்கும் என்று ஐ.நா எச்சரித்துள்ளது.

இது தொடர்பான ஐ.நாவின் அறிக்கையில், ‘பூமியை மிகவும் ஆபத்தான புயல்கள், கட்டுபாடற்ற மழை, வெள்ளம், வறட்சி ஏற்பட புவியின் மேற்பரப்பு வெப்பநிலை இன்னும் கூடுதலாக 1 டிகிரி செல்சியஸ் உயர்ந்தால் போதுமானது.

இதனை கட்டுப்படுத்தாவிட்டால், 2030க்குள் பசுமை இல்லா வாயுக்களின் வெளியேற்றத்தால் வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸை கடக்கக் கூடும். பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த 50 சதவித வாய்ப்பு உள்ளது.

மனித குலம் அடுத்த பத்து ஆண்டுகளில் முக்கியமான கட்டத்தில் உள்ளது. நமது வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் சேதத்தை தவிர்பதற்கு, நம்மிடம் குறைந்த அளவிலான வாய்ப்புகளே உள்ளன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி