இந்தோனேசியாவிற்கு உலக வங்கி வழங்கியிருக்கும் 100 கோடி டொலர் கடனுதவி!!

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பேரழிவு பாதிப்புகளை சரிசெய்ய, உலக வங்கி 100 கோடி டொலர் கடனுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 29ஆம் திகதி இந்தோனேசியாவின் சுலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர், அங்குள்ள பலு நகரை சுனாமி தாக்கியது. இதனால் ஏறக்குறைய அந்நகரம் அழிவு நிலைக்கு சென்றது.

பலர் வீடுகளை இழந்தனர். பல்வேறு கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து தரைமட்டமாகின. இந்த கோர தாக்குதலால் சுமார் 2 ஆயிரம் பேர் பலியாகினர். மேலும், பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட சேதங்களை சர்வதேச நிதியமான I.M.F மற்றும் உலக வங்கி உயர் அதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர், அங்கு ஏற்பட்ட இழப்புகளை அவர்கள் மதிப்பீடு செய்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, இந்தோனேசியாவில் ஏற்பட்ட பாதிப்புகளை மறுகட்டமைப்பு செய்ய, உலக வங்கி தற்போது 100 கோடி டொலர்களை கடனுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த தொகையானது, பேரழிவால் பாதிக்கப்பட்ட சுமார் ஒன்றரை லட்சம் குடும்பங்களுக்கு, பண இழப்பீடாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி