மகிந்தவிடம் 140 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை அறவிட்டு தருமாறு இ.போ.சபை கோிக்கை!!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக தமது நிறுவனத்தின் பேருந்துகளை பயன்படுத்தியதன் மூலம் ஏற்பட்டுள்ள 140 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை அவரிடம் அறவிட்டு தருமாறு கோரி இலங்கை போக்குவரத்துச் சபை தாக்கல் செய்துள்ள மனு சம்பந்தமான பதிலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம; திகதி முன்வைக்குமாறு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம், மகிந்த ராஜபக்ச தரப்பிற்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஆர் குருசிங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இந்த வழக்கு சம்பந்தமான பதிலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதிக்கு முன்வைக்குமாறு நீதிபதி, இரண்டு தரப்பின் சட்டத்தரணிகளுக்கு அறிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது அரசியல் பணிகளுக்கு போக்குவரத்துச் சபையின் பேருந்துகளை பெற்றுக்கொண்டதாக கூறியுள்ளார்.

இதற்காக செலுத்த வேண்டிய 140 மில்லியன் ரூபாய் பணத்தை அவர் இதுவரை செலுத்தவில்லை எனவும் போக்குவரத்துச் சபை கூறியுள்ளது.

இதனால், இந்த பணத்தை முன்னாள் ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு போக்குவரத்துச் சபை வணிக மேல் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி