கொழும்பில் திடீர் சுற்றி வளைப்பு...ஆபாச விடுதிகளில் சிக்கிய 15 யுவதிகள்…!

கொழும்பின் புறநகர் பகுதிகளில் உள்ள மசாஜ் நிலையங்கள் பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சுற்றிவளைப்பு பற்றி பொலிஸார் தெரிவிக்கையில், ஜாஎல, எக்கல பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிக் கொண்டு இருக்கும் 3 விபச்சார விடுதிகள் களனி குற்ற விசாரணை பிரிவினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இதன்போது விபச்சார விடுதிகளில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விடுதியின் ஆண் முகாமையாளர்கள் இருவர் மற்றும் பெண் முகாமையாளர் ஒருவரும், 12 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் 22 மற்றும் 38 வயதுடைய கம்பஹா, மினுவங்கொட, பியகம,தம்புத்தேகம, ரத்கம, பொலன்நறுவை, நுவரெலியா, கதிர்காமம், அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தகவல் வெளிவந்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி