சொந்த மகளை 16 மாதங்கள் துஸ்பிரயோகம் செய்த கொடூர தந்தை!!

பிரித்தானியாவின் கிழக்கு சசெக்ஸ் பகுதியில் சொந்த மகளையே தொடர்ந்து 16 மாதங்கள் துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கிழக்கு சசெக்ஸின் ஹஸ்டிங்ஸ் பகுதியில் குடியிருந்து வருபவர் தற்போது 17 வயதாகும் ஸ்டெபானி.

தனது 5 வயது முதலே தாம் தத்தெடுக்கப்பட்டது தெரியவந்தது என கூறும் அவர், தனது 14-வது பிறந்த நாள் அன்று தமது உண்மையான பெற்றோர்கள் எழுதிய டசின் கணக்கான கடிதங்களை தமது தத்து பெற்றோர் பரிசாக அளித்தனர் என்றார்.

அப்போதிருந்தே தமக்கு உயிர் தந்த பெற்றோர்கள் தொடர்பில் தகவல் திரட்ட முயன்றதாக கூறும் ஸ்டெபானி, பேஸ்புக் மூலம் தமது தந்தையின் முகவரியை கண்டுபிடித்துள்ளார்.ஆனால் தமது தந்தையும் தாயும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதையும், தம்மை தத்துப்பிள்ளையாக கைவிட்டதில் வருந்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஸ்டெபானியும் தந்தை பாரி ஜாக்சனும் வேர்பிரியாத அளவுக்கு நெருக்கமாகினர். தொடர்ந்து தமது குடியிருப்புக்கே ஸ்டெபானியை அழைத்து வந்துள்ளார் ஜாக்சன்.

இந்த நிலையில் ஸ்டெபானியின் 15-வது பிறந்த நாளுக்கு 3 நாட்கள் முன்பு அந்த கொடூர சம்பவம் அரங்கேறியது.

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அது, மாலை மது போதையில் குடியிருப்புக்கு திரும்பிய ஜாக்சன், தமது மகள் ஸ்டெபானியை வலுக்கட்டாயமாக முத்தமிட முயன்றுள்ளார்.அதற்கு மறுப்பு தெரிவித்த அவரை இழுத்துச் சென்று நடு கூடத்தில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார்.

உணர்வற்று கிடந்த தம்மிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் தந்தை மாடியில் உள்ள தமது அறைக்கு நடந்து செல்வதை கண்ணீருடன் கண்டிருந்ததாக ஸ்டெபானி பின்னர் பதிவு செய்துள்ளார்.

அடுத்த நாள் காலையில் இது தொடர்பில் விவாதித்த மகளை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார் ஜாக்சன்.

அதைத் தொடர்ந்து நீண்ட 16 மாதங்கள் நரக வேதனை அனுபவித்ததாக கூறும் ஸ்டெபானி, எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் தம்மை துஸ்பிரயோகம் செய்தார் எனவும்,ஒரு பாலியல் பொம்மை போன்று தம்மை அவர் நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த 16 மாதங்களும், அறைக்குள் தம்மை பூட்டி வைத்துவிட்டு அவர் பணிக்கு செல்வதாகவும், தம்மால் அவரை மீறி எதையும் செய்துவிட முடியாதபடி சிறை வைத்தார் என்றும் ஸ்டெபானி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இனிமேல் தந்தையின் பாலியல் இச்சைக்கு இரையாக முடியாது என முடிவு செய்த ஸ்டெபானி, 2017 ஜனவரி மாதம் தமக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து முதன் முறையாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

வழக்கம்போல அன்றும் ஸ்டெபானியிடம் வலுக்கட்டாயமாக நெருங்கிய ஜாக்சனை பொலிசார் சம்பவயிடத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி