மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்டுள்ள 17 சிறுவர்களுடைய எலும்புக்கூடுகள்!

மன்னார், பழைய சதொச களஞ்சியத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளில் இன்று வரை 148 மனித உடல்களின் எலும்புகள் கிடைத்துள்ளதாக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள பேராசிரியர் ராஜா சோமதேவ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“12 மீற்றர் நீளம் மற்றும் 8 மீற்றர் அகலமான பகுதியில் இருந்தே இந்த 148 மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்டுள்ள 148 எலும்புக்கூடுகளில் 17 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது.

மனித புதைக்குழியில் அகழ்வு பணிகள் எப்போது நிறைவடையும் என்பதை கூற முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி