தைவானில் தடம் புரண்டு தூக்கி வீசப்பட்ட ரயில்!18 பேர் பலியானதோடு 187 பேர் படுகாயம்!!

தைவானில் ரயில் ஒன்று வளைவில் அளவுக்கு மீறி வேகமாக வந்ததால் தடம் புரண்டதில் தூக்கி வீசப்பட்டது.

இந்த விபத்தில் 18 பேர் பலியானதோடு 187 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக தைவான் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள வீடியோவில் அதிவேகமாக வரும் ரயில் ஒன்று வளைவில் திரும்பும்போது தடம் புரண்டு ஒரு தூணில் மோதி வீசியெறியப்படுவதைக் காண முடிகிறது.

Shulin மற்றும் Taitung நகரங்களுக்கிடையே பயணித்த அந்த எட்டு பெட்டிகளைக் கொண்ட ரயிலில் 366 பயணிகள் பயணம் செய்தனர்.

விபத்திற்கு காரணம் மனிதத் தவறா அல்லது தொழில் நுட்பக் கோளாறா என்பது குறித்து தற்போதைக்கு தெரியாத நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஆனால் விசாரணை அதிகாரிகளில் ஒருவர், வளைவில் பயணிக்கும்போது மணிக்கு 75 கிலோமீற்றர் வேகத்தில் செல்ல வேண்டிய அந்த ரயில், விபத்து நடந்தபோது மணிக்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் சென்றதாக தெரிவித்துள்ளார்.

ரயிலின் பிரேக்குகளை இயக்கும் தொழில்நுட்பத்திலும் கோளாறு இருந்ததாக விபத்து நடப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் ரயிலின் ஓட்டுநர் பதிவு செய்த அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.


இறந்தவர்களில் திருமணம் ஒன்றிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேரும் அடங்குவர்.

ரயிலின் ஓட்டுநரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர்

சற்று குணமடைந்ததும் அவரிடம் விசாரணை செய்ய பொலிசார் முடிவு செய்துள்ளனர்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி