பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை வெற்றி !

பிருத்வி - 2 ஏவுகணை அணுகுண்டு உள்ளிட்ட 1,000 கிலோ ஆயுதங்களை சுமந்து சென்று, 350 கி.மீ தூரமுள்ள எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகில் உள்ள சண்டிப்பூரில் பிருத்வி-2 ஏவுகணை சோதனை நேற்று இரவு நடத்தப்பட்டது. மொபைல் லாஞ்சர் கருவியில் இருந்து செலுத்தப்பட்டதும், திட்டமிட்டபடி பறந்து சென்று இலக்கை பிருத்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.ஏவுகணைத் தாக்குதலின் துல்லியத் தன்மை உள்பட அனைத்து செயல்பாடுகளும், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு முகமையின் கண்காணிப்பு நிலையங்கள், ரேடார் சாதனங்கள் உள்ளிட்டவற்றால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டன என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏற்கனவே, பிருத்வி-2 ஏவுகணையின் இரவு நேர சோதனை கடந்த பிப்ரவரி 21-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை 2003-ம் ஆண்டு இந்திய பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி