காணி தகராறு காரணாக 21 வயது பெண் கொடூரமாக தாக்கப்பட்டார் .

காணி தகராறு காரணாக வீடொன்றுக்கு புகுந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
செவனகல பிரதேசத்தின் வீடொன்றுக்கு நேற்றிரவு (30.09.2018) அத்துமீறி நுழைந்த குழுவொன்று அங்கிருந்த தாய், தந்தை மற்றும் அவர்களது 21 வயது மகளை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த மூவரும் பிரதேசவாசிகளால் ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை , தாக்குதலை மேற்கொண்ட நபர்களுள் ஒருவர் டி56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குலுக்கு உள்ளான நபர்களின் காணியை பலாக்காரமான முறையில் கைப்பற்றுவதற்காக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் , குறித்த காணி தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையில் நீண்ட காலமாக நிலவிய தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கக் கூடும் என காவற்துறை சந்தேகிக்கின்றது.
சம்பவம் தொடர்பில் செவனகல காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி