புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்துள்ள 21 தமிழ் மாணவர்கள்!

2018ஆம் ஆண்டுக்கான ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று வெளியாகி உள்ளன.

இதன் அடிப்படையில், காரைதீவுப் பாடசாலைகளில் 21 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று சித்தி பெற்றுள்ளனர்.

காரைதீவுக் கோட்டத்தில் 191 புள்ளிகளை காரைதீவு இராமகிருஸ்ணமிசன் ஆண்கள் பாடசாலை மாணவன் கேந்திரமூர்த்தி கஜருக்‌ஷன் பெற்றுள்ளார்.காரைதீவுக்கோட்ட வரலாற்றில் இதுவரைகாலமும் இல்லாத வரலாற்றை 191 புள்ளிகள் பெற்று கஜருக்சன் பதிவுசெய்து சாதனை படைத்துள்ளார்.

இதேவேளை, இ.கி.மிசன் பெண்கள் பாடசாலை- 09 மாணவிகளும், இ.கி.மிசன் ஆண்கள் பாடசாலை 04 மாணவர்களும், சண்முகா மகா வித்தியாலயத்தில் 04 மாணவர்களும், கண்ணகி வித்தியாலயத்தில் 02 மாணவர்களும், விஷ்னு வித்தியாலயம் மற்றும் விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும் தலா ஒருவர் வீதம் இருவர் சித்தி பெற்றுள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி