28 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட வடக்கின் ஒரு பகுதி!

மன்னார் - திருக்கேதீஸ்வரம், மாந்தை பகுதியில் இராணுவத்தின் வசமிருந்த 5 ஏக்கர் காணி மன்னார் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணி நேற்று மாலை கையளிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச செயலக காணி அலுவலகர் க.வசந்தன் தெரிவித்துள்ளார்.

1990ஆம் ஆண்டு முதல் இராணுவத்தின் வசம் இருந்த குறித்த 5 ஏக்கர் காணி சுமார் 28 வருடங்களின் பின்னர் நேற்று உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் வகையில் மன்னார் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த 5 ஏக்கர் காணியில் சுமார் 15 குடும்பங்களுக்கான காணி, திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலகர் சபைக்கான காணி மற்றும் வைத்தியசாலைக்கான காணி அடங்குவதாக மன்னார் பிரதேச செயலக காணி அலுவலகர் க.வசந்தன் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி