3 கோடி, பேஸ்புக் பயனாளர்களின் இரகசிய தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
பயனாளர்களின் பிறந்த திகதி, கல்வி உள்ளிட்ட பிற தகவல்கள் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், 1.5 கோடி நபர்களின் மேலும் பல தகவல்களையும் ஹேக்கர்கள் திருடியுள்ளதாகவும், 1.4 கோடி மக்களுடைய பெயர்கள் மற்றும் தொடர்பு விபரங்களை திருட ஹேக்கர்கள் முயற்சித்துள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.