வரும் திங்கட்கிழமை 30 அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவை; உறுதிப்படுத்தப்பட்ட தகவல்!

மஹிந்த பிரதமராக நேற்று முன் தினம் பதவியேற்ற நிலையிலும், தாமே தொடர்ந்து பிரதமராக இருப்பதாக ரணில் அறிவித்துள்ள நிலையில் கொழும்பு அரசியல் பெரும் குழப்பம் நீடித்து வருகின்றது.

இந்த நிலையில் மஹிந்த புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீங்கப்பட்டதாகவும் தெரிவித்து இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்களை அரச தலைவர் மைத்திரியின் உத்தரவுக்கமைய விடுக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து நேற்று இரவு புதிய பிரதமர் மஹிந்த மற்றும் அவருக்கு ஆதரவு வழங்கும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 96 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்திருந்தார்.

இதன்போது புதிய அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆராய்ந்த பின்னர் நாளைய தினம் 29-ம் திகதி புதிய அமைச்சரவை பதவியேற்குமென மைத்திரி அறிவித்தார்.

மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றதையடுத்து மைத்திரி -ரணில் தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தின் 49 பேரைக்கொன்ட அமைச்சரவையின் பதவிக்காலம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனையடுத்தே நாளை மறுதினம் பதவியேற்கவுள்ள மைத்திரி - மஹிந்த அரசாங்கத்தின் அமைச்சரவை 30 பேரைக்கொண்டிருக்குமென ஜனாதிபதி செயலகம் மற்றும் மஹிந்த தரப்பினரே உறுதிப்படுத்தியுள்ளனர்.

யார் யாரை எந்தெந்த அமைச்சுப்பதவியில் நியமிப்பது தொடர்பிலும் மைத்திரியும் மஹிந்தவும் கலந்துரையாடி முடிவெடுத்திருப்பதாகவும் அந்தத்தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி