பயணிகளிடம் இருந்து 3,200 டொலர் அபராதம் விதிக்கும் நியூசிலாந்து அரசு!!

நியூசிலாந்து செல்லும் சுற்றுலாப்பயணிகள் தங்கள் மொபைல் கடவுச்சொல்லை அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் எனவும், மறுத்தால் ஆயிரக்கணக்கான டொலர் அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்த நாட்டு அரசு சட்டம் இயற்றியுள்ளது.

நியூசிலாந்து அரசின் இந்த முடிவுக்கு சமூக ஆர்வலர் குழுக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், குறித்த சட்டத்தை திரும்பபெற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.

சுங்கம் மற்றும் கலால் சட்டம் 2018-ன் படி குறித்த புதிய உத்தரவானது இந்த வாரம் முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இதனால் நியூசிலாந்துக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் தங்கள் மொபைல் கடவுச்சொல்லை அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் எனவும், மறுப்பு தெரிவிக்கும் பயணிகளிடம் இருந்து 3,200 டொலர் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

இது தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் செயல் எனவும் அவர்கள் பயன்படுத்தும் மொபைல் வழியாக அவர்களை தொடர்புகொள்பவர்களை வேவு பார்ப்பதாகும் எனவும் கண்டனக் குரல் எழுந்துள்ளது.

மேலும், தற்கால மொபைலானது பயனாளர்களின் அனைத்து வகையான தகவல்களையும் சேமிக்கப்பட்டிருப்பதால் குறித்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபோன்ற சட்டத்தை அமுல்படுத்தும் முதல் நாடு நியூசிலாந்து என்றபோதும் 2017 ஆம் ஆண்டு சுமார் 14 மில்லியன் பயணிகள் வருகை தந்துள்ள நிலையில் வெறும் 537 பயணிகளின் மொபைல் மட்டுமே தீவிர சொதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இதுபோன்ற சட்டம் அமுலில் உள்ளது என்றாலும், மறுப்பு தெரிவிக்கும் பயணிகளை அவர்கள் நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை எனவும் நியூசிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அமெரிக்காவில் சந்தேக நபர்களிடம் இருந்து மட்டுமே மொபைல் கடவுச்சொல்லை அமெரிக்க அதிகாரிகள் பெறுவதாக கூறப்படுகிறது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி