ஆன்லைன் காதலிக்காக 3900 மைல்கள் தாண்டி பயணம் செய்த சிறுவன்!

ரஷ்யாவில் 3900 மைல்கள் தாண்டி பயணம் செய்த இளைஞர், ஆன்லைன் தோழி தன்னுடைய காதலை ஏற்க மறுத்ததால் அவரை கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.

ரஸ்யாவை சேர்ந்த 16 வயது சிறுவனான கிரில் வொல்ஸ்கி, ஆன்லைன் மூலம் கிறிஸ்டினா கம்ரேயேவா என்ற சிறுமியை சந்தித்துள்ளார்.

நாளடைவில் நட்பு காதலாக மாறியுள்ளது. அடிக்கடி வீடியோ கால் மூலம் இருவரும் பேசியுள்ளனர். அப்போது ஒருமுறை கிரில் அம்மா, என்னுடைய மகன் உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான் என கிறிஸ்டினாவிடம் கூறியுள்ளார். ஆனால் கிறிஸ்டி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.இதனையடுத்து கிரில் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை கொண்டு, ஹபரோவ்ஸ்க்கீழிருந்து 3900 மைல்கள் தாண்டி மாஸ்கோவிற்கு தன்னுடைய காதலியை பார்க்க சென்றுள்ளார். அங்கு, நானும் என்னுடைய அம்மாவும் ஒரு திருமணத்திற்காக வந்திருக்கிறோம் என கிறிஸ்டினாவிடம் கூறியுள்ளான்.அதனை நம்பி சிறுவன் தங்கியிருந்த அறைக்கு கிறிஸ்டினாவும் சென்றுள்ளார். அங்கு கத்தியை கொண்டு கிறிஸ்டினாவை சிறுவன் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளான். பின்னர் யாரும் கண்டுபிடித்து விட கூடாது என்பதற்காக அவருடைய உடலை கழிவு நீர் கால்வாயில் மூழ்கடித்துள்ளான்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி