காணிகளை விடுவிப்பதற்கு 59 மில்லியன் பணம் கோரும் படையினர்!!

நாடாளுமன்ற உறுப்பினர்களையும் காணிகள் தொடர்பான திணைக்களங்களின் அதிகாரிகளையும் வடமாகாண ஆளுனர் மாவட்ட செயலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள 68 ஆவது படைப்பிரிவின் 2 ஆவது படைமுகாம் அமைந்துள்ள மக்களுக்கு சொந்தமான காணி இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கின்றது. ஒரு பகுதி மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளது இந்த காணிகள் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக படைத்தரப்பிற்கு 59 மில்லியன் பணம் தேவை என்பதை படையினர் மாவட்ட செயலத்தில் தெரிவித்துள்ளார்கள்.

ஜனாதிபதியிடம் இருந்து அந்த பணம் கிடைத்தவுடன் மிக விரைவில் அந்த இடம் விடுவிக்கப்படும் என்று இராணுவத் தளபதியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை புதுக்குடியிருப்பு சந்தியில் அமைந்துள்ள படைப்பொலிசார் நிலைகொண்டுள்ள காணி அபிவிருத்திக்காக உடனடியாக விடுவிக்கப்படவுள்ளதாகவும் படைத்தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி