காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 5 வீரர்கள் படுகாயம்

ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் இன்று வாகனத்தில் ரோந்து சென்றனர். பந்தா சவுக் பகுதியில் வரும்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் அந்த வாகனத்தின் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தபபிச் சென்றனர்.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வாகனத்தில் இருந்த 5 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி