சிறைகளிலிலுள்ள 70 வயதுக்கு மேலான முதியவர்களை விடுதலை செய்ய அரசு தீர்மானம்!

சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் 70 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களை விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானத்தின் கீழ் கொலை மற்றும் போதைப்பொருள் குற்றச் செயல்களுக்காக மரண தண்டனை, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தவிர்ந்த ஏனைய 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 70 வயதுக்கும் மேற்பட்ட சுமார் 50இற்கும் மேற்பட்ட கைதிகள் சிறைகளில் தண்டனை அனுபவித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கைதிகள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி