நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பொறுப்பு அரசாங்கமே!!

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு காரணமானவர்கள் தற்போதைய அரசாங்கத்திலேயே இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடுவலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவி்க்கையில்,

கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட துறைமுகங்கள் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யும் திட்டம் தம்மிடம் இருந்தது.

அவற்றை முழுமையாக நிறுத்தியதன் காரணமாகவே நாட்டின் பொருளாதாரத்திற்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சினால் அப்போது ஆரம்பிக்கப்பட்ட பல திட்டங்கள், குறிப்பாக, அவன்கார்ட் திட்டமானது இந்த நாட்டில் ஒருபோதும் இல்லாதிருந்த திட்டமாகும்.

கடற்படையும் அரசுக்கு முழுமையான உரித்துடைய ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனமும் அவன்கார்ட் என்ற தனியார் நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட வர்த்தக திட்டத்தின் ஊடாக பாரிய வெளிநாட்டு வருமானம் கிடைத்துள்ளது.

அன்றிருந்த சூழ்நிலையில் பயன்பெற்று அந்த திட்டத்தை உருவாக்கி பெருமளவானோருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க முடிந்தது.

ஆனால், அதுபோன்ற திட்டங்கள் பொய்யான குற்றச்சாட்டுக்களின் மூலம் சீர்குழைக்கப்பட்டுள்ளதாக கோத்தபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி