மறுசீரமைக்கப்படவுள்ள அமைச்சரவை! மைத்திரியின் அதிரடி முடிவு!!

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மறுசீரமைக்கப்படவுள்ளது எனத் தகவல்கள் கசிந்துள்ளன.

இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான ரவி கருணாநாயக்க, சு.கவின் எம்.பியான தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் எனவும், சில அமைச்சுகளின் விடயதானங்கள் கைமாறவுள்ளன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக சட்டம், ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் எனப் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருவதால் அதை ஜனாதிபதி செய்வதற்குரிய சாத்தியக்கூறுகளும் பிரகாசமாகத் தென்படுகின்றன.

எனினும், இவை தொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதேவேளை, நிதி அமைச்சின் செயலராக உள்ள ஆர்.எச்.எஸ். சமரதுங்க ஓய்வுபெறுவதால், அவருக்குப் பதிலாக தனது தெரிவான ஒருவரை ஜனாதிபதி நியமிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.செவ்வாயன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து ஆராயப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி