யாழில் துப்பாக்கிச் சூடு!!

யாழ். அரியாலை, மணியந்தோட்டம் பகுதியில் நேற்று மாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சிவில் உடையில் நின்றிருந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை சிவில் உடையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தமக்கு கிடைக்கவில்லை என வட மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இரண்டு உழவு இயந்திரங்கள் மணலுடன் நேற்று மாலை 5.30 மணியளவில் அந்தப் பகுதியால் வந்துள்ளன. இதன்போது சிவில் உடையில் நின்றவர்கள் உழவு இயந்திரத்தை மறித்துள்ளனர்.

உழவு இயந்திரங்களை நிறுத்தாமல் சாரதிகள் செலுத்திச் செல்லவே, வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதன் பின்னர் உழவு இயந்திரங்களை நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் உழவு இயந்திரங்களுடன் சாரதிகள் தப்பித்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி