சீனாவிடமிருந்து மேலும் ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறும் இலங்கை!!

சீனாவிடமிருந்து மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனை இலங்கை பெற்றுக் கொள்ள உள்ளதாக தெரியவருகிறது.

இந்த வாரத்தில் இந்த கடன்தொகை பெற்றுக்கொள்ளப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபாவுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்கு மத்தியில் இந்தக் கடன்தொகை பெறப்படவுள்ளது.

இதேவேளை, மத்திய வங்கி விரைவில் பிணை முறி விநியோக நடவடிக்கை ஒன்றுக்கு செல்ல உள்ளதாகவும், இலங்கை ரூபாவுக்கு எதிரான அமரிக்க டொலரின் பெறுமதி மேலும் அதிகரிப்பதற்கு முன்னர் இந்த பிணை முறிவிநியோகம் இடம்பெறவுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி