தமிழ் அரசியல் கைதிகளின் நிபந்தனையற்ற விடுதலையை வலியுறுத்தி போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளின் நிபந்தனையற்ற விடுதலையை வலியுறுத்தி மட்டக்களப்பு நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, காந்திபூங்காவில் இன்று காலை முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு மணிக்கூண்டு கோபுரத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை இந்த கவனயீர்ப்பு பேரணி சென்றதை தொடர்ந்து காந்திபூங்கா முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், பிரதேச சபையின் தவிசாளர்கள், பிரதேசசபை, மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி