அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்த தீர்மானித்துள்ள ஜே.வி.பி!!

வரி அதிகரிப்பு, பொருட்களின் விலை அதிகரிப்பு, அரச வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மக்கள் மீது வரிகளை அதிகரித்துள்ளதுடன் பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளதுடன் அரச வளங்களை விற்பனை செய்து வருவதாகவும் குறைந்த விலைக்கு அரச நிறுவனங்களை விற்பனை செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தும் நாடு முழுவதும் நடத்த உள்ளதாகவும் அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கையினால் பாதிக்கப்பட்டுள்ள முழு நாட்டு மக்களும் இதில் கலந்துக்கொள்ளுமாறும் அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.



Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி