வடக்கில் அத்தியாவசிய தேவையாக மாறி வரும் கஞ்சாவின் பாவனை!!

வடக்கில் அத்தியவசிய உணவு போல் கஞ்சாவின் பாவனை பழகிவிட்டது. மலையகத்திலும் இவ்வாறான நிலை உருவாகும் என்ற அச்சம் தோன்றியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர் தின நிகழ்வு இன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் பவானி ரகுநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு, கிழக்கு பகுதிகளில் 30 வருட கால யுத்தத்திற்கு பின்னர் அதிகளவு கேரளா கஞ்சாவின் பாவனை மக்களை ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்கும், தடுப்பதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட மாகாண சபைகளின் உறுப்பினர்களும் சபை கூட்டங்களில் தடுமாறுகின்றனர்.இந்த பாவனை வடக்கில் அத்தியவசிய உணவு போல் பழகிவிட்டது. மலையக மக்கள் எவ்வாறு கோதுமை மாவில் ரொட்டியை ஆரம்ப உணவாக உட்கொள்கிறார்களோ அதேபோல் வடக்கில் கஞ்சாவின் பாவனை அதிகரித்துள்ளது.

இதேபோல் மலையகத்திலும் இவ்வாறான நிலை உருவாகும் என அச்சமாக உள்ளது. போதைப் பொருளின் பாவனை மலையகத்தில் அதிகரித்து விட்டால் போதைப் பொருள் பழக்கத்திலிருந்து மலையகத்தை மீட்டெடுப்பது பாரிய கஷ்டமாகும்.இதேபோன்று பதுளையில் போதைபொருள் பாவனை ஆரம்பமாகியுள்ளது. இதில் ஆண் பிள்ளைகள் மட்டுமில்லாமல் பெண் பிள்ளைகளும் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.

இதேவேளை, மாணவர்கள் தவறான பாதைக்கு கொண்டு செல்வதற்கு நாம் ஒருபோதும் துணையாக இருக்க கூடாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி