செல்பி மோகத்தில் உயிரை விட்ட பெண்!!

பனாமாவுக்கு அருகில் உள்ள El Cangrejo என்னும் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்றில் செல்பி எடுக்க முயன்ற ஒரு பெண் மாடியிலிருந்து தவறி விழும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகி காண்போரை திடுக்கிடச் செய்கிறது.

கட்டிடத் தொழிலாளர்கள் சிலர் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும்போது தற்செயலாக எடுத்த அந்த வீடியோவில் ஒரு பெண் செல்பி எடுப்பதற்காக செல்பி ஸ்டிக்குடன் நிற்பது தெரிகிறது.

அவர் செல்பி எடுக்க முயலும்போது, கால் தவறியதோ என்னவோ, பின்பக்கமாக சாய்ந்து மாடியிலிருந்து கீழே விழுகிறார்.


அந்தப் பெண்ணின் பெயர் Sandra Manuela Da Costa Macedo என்றும் அவர் செல்பி எடுக்க முயல்வதைப் பார்த்துக் கொண்டிருந்த கட்டிடத் தொழிலாளர்கள், காற்று பலமாக அடிப்பதாகவும், கவனமாக நிற்குமாறும் கத்தியிருக்கிறார்கள்.

ஆனால் காற்றில் அந்த பெண்ணுக்கு அவர்களது சத்தம் கேட்கவில்லை. போர்ச்சுகீஸ் நாட்டைச் சேர்ந்த அந்த பெண் முதலில் ஒரு சுற்றுலாப்பயணி என பொலிசார் கருதிய நிலையில், அவருக்கு அறிமுகமான ஒரு பெண் அவர் ஒரு ஆசிரியை என்று தெரிவித்தார்.

ஆனால் அந்த பெண் நேரில் வந்து பார்க்கும்போது Sandra உயிருடன் இல்லை.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி