நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் பல திறப்பு !

நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் அடைமழையைத் தொடர்ந்து பல நீர்த்தேக்கங்களினதும் நீரோட்டங்களினதும் வான்-கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம்தெரிவித்துள்ளதாவது.
நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் அடைமழையைத் தொடர்ந்துஇ பல நீர்த்தேக்கங்களினதும்இ நீரோட்டங்களினதும் வான்-கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தெதுறு ஓயா நதியின் கீழ்ப்புற கரைகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பராக்கிரம சமுத்திர நீர்த்தேக்கத்தின் 10 வான்கதவுகளல் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இராஜாங்கனை நீர்த்தேக்கம் அங்கமுவ நீர்த்தேக்கம் பொல்கொல்லை அணைக்கட்டு ஆகியவற்றின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. குக்குலே-கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவு ஒன்றும் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி