பட்டும் படாம நடந்துக்கணும்! இளம் பெண்னை வெளிநாடு சுற்றுலா செல்ல அழைத்த வைரமுத்து? - அதிர்ச்சி தகவல்

பாடகி சின்மயி ஏற்படுத்திய பாலியல் சர்ச்சைக்கு இன்று தான் ஒரு வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார் வைரமுத்து.

இந்நிலையில் தற்போது வேறொரு பெண்ணிடம் அவர் தவறாக நடந்தது பற்றி செய்தி வெளிவந்துள்ளது. பாடகி ஆகும் கனவோடு அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த பெண்னை வைரமுத்து ஒரு கடை விளம்பர விஷயத்திற்காக சந்தித்தாராம். அப்போது தன் ஆபிசுக்கு வரும் படி அழைத்துள்ளார். அதை ஏற்று அந்த பெண் ஆபிஸ் சென்று பாடிகாட்டிவிட்டு வந்துவிட்டார்.

அதன்பின் அந்த பெண்ணின் தொலைபேசிக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு தொல்லை செய்துள்ளார் வைரமுத்து. நான் ஒரு விருது வாங்க மலேசியா செல்கிறேன், என்னுடை வருகிறாயா என ஒரு நாள் கேட்டாராம் வைரமுத்து.

" பாடுவதற்கா இல்லை ஆங்கரிங் செய்யவா?" என பெண் கேட்டாராம். அதற்கு அவர் "இரண்டும் இல்லை. உனக்கு புரியவில்லையா. சினிமா துறையில் இது சாதாரணம். பட்டும் படாம நடந்துக்கணும்" என கூறியுள்ளார்.

அந்த பெண் முடியாது என கூறியதும், "உன் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் செய்துவிடுவேன்" என மிரட்டிய வைரமுத்து போனை கட் செய்துவிட்டாராம்.

பெயரை வெளியிடாமல் அந்த பெண் 20 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் பற்றி தற்போது வெளியுலகத்திற்க்கு கூறியுள்ளார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி