மைத்திரி மற்றும் மஹிந்த இணைவதே வடக்கின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்தால் மட்டுமே வடக்கின் பிரச்சினைகளைத் தீர்க்க பெரும்பான்மையினரான சிங்கள, பௌத்த மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கின் பிரச்சினையை தீர்ப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சித் தலைவரும் ஒரு விடயத்தை கூற விரும்புவதாக எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கான பெரும்பான்மையினரான சிங்கள, பௌத்த மக்களின் நம்பிக்கையை பெறவேண்டுமாயின், மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இணைந்தால் மாத்திரமே அது சாத்தியமாகும் என எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி