விமல் வீரவங்சவை கைது செய்ய வேண்டும் - ரஞ்ஜித் சொய்ஷா

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச வெளிப்படுத்திய கருத்து ஒன்றில் அவரைக் கைது செய்திருக்க வேண்டும் அல்லது அவரிடம் சி.ஐ.டி. விசாரணை நடாத்தியிருக்க வேண்டும் என கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்ஷா தெரிவித்தார்.

இருப்பினும், இந்த இரண்டும் செய்யப்படாமல் அரசாங்கம் பொறுப்பற்று இருப்பதில் மர்மம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்வதற்கு சதி செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் இந்தியாவின் “ரோ” உளவுப் பிரிவின் உறுப்பினர் ஆவார் எனவும் இவருடைய அங்கத்தவர் இலக்கமும் கண்டறியப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்து பொய்யாயின் அவரைக் கைது செய்திருக்க வேண்டும். இல்லாவிடின், அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த இரண்டும் செய்யப்படவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி