பெரும்பான்மையை நிரூபித்து காட்டுமாறு சவால் விட்ட ஐக்கிய தேசிய கட்சி!!

சட்டரீதியாக நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபியுங்கள் என ஐக்கிய தேசிய கட்சி சவால் விடுத்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் தற்போது இடம்பெறுவது சட்டவிரோத அரசியல் நடவடிக்கை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர்களான நளின் பண்டார மற்றும் சுஜிவ சேனசிங்க ஆகியோர் இதனை தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்தும் பேசிய அவர்கள்,

அலரி மாளிகையை விட்டு நாம் வெளியேற மாட்டோம், சட்டரீதியாக நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபியுங்கள். அதன் பின் நாங்கள் அலரி மாளிகையை விட்டு வெளியேறுகின்றோம்.

நாடாளுமன்றத்தை கூட்டாமல் இருப்பது இராணுவ ஆட்சியாக கருதப்படும். இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன ஜனநாயகம் எந்தப் பக்கம் நிலை நாட்டப்படுகின்றதோ அந்தப் பக்கமே அதன் ஆதரவும் இருக்கும்.

இந்நிலையில், தற்போது நாட்டில் இடம்பெறுவது சட்டவிரோதமான அரசியல் செயற்பாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி