கல்வி நிலையத்துக்கு சென்று திரும்பும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!

யாழில் தனியார் கல்வி நிலையத்துக்கு சென்று திரும்பும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபருக்கு எதிராக மேலும் 4 வழங்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் சில மாணவிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்தில் குறித்த நபருக்கு எதிராக முறைப்பாடுகளை வழங்கியுள்ளனர்.

அந்த முறைப்பாடுகளை பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்தனர். இதையடுத்தே அவர் மீது நான்கு வழக்குகளை யாழ்ப்பாணம் பொலிஸார் தாக்கல் செய்துள்ளனர்.

யாழில் தனியார் கல்வி நிலையத்துக்கு சென்று திரும்பும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் குறித்த நபர் கடந்த 10ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இவரை 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டிருந்த நிலையில், மேலும் சில மாணவிகள் இவர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

அதனை அடுத்து சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிட்ட நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், அவரின் விளக்கமறியலை வரும் 30ஆம் திகதிவரை நீடித்தார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி