சிறைச்சாலையில் சாரணர் அமைப்பு நிகழ்வும், கைதிகளின் சின்னம் சூட்டும் வைபவமும்!

திருகோணமலை சிறைச்சாலையில் சாரணர் அமைப்பு ஆரம்ப நிகழ்வும், கைதிகளின் சின்னம் சூட்டும் வைபவமும் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை சிறைச்சாலை வளாகத்தில் இன்று அத்தியட்சகர் ரஜிவ சிறிமால் சில்வா தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதன் போது சிறைச்சாலை கைதிகள் சாரணர் அமைப்பு உத்தியோகபூர்வமாக சின்னம் சூட்டல் நிகழ்வுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சிறைச்சாலை ஆணையாளர், சிறைச்சாலை நலன்புரி சங்கத்தின் தலைவர் மற்றும் ஆலோசகர், உறுப்பினர்கள், பிரதான ஜெயிலர், புனர்வாழ்வு அதிகாரிகள், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் கைதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி