ஓட்டமாவடியில் பெற்ற குழந்தையின் ஆணுறுப்பை துண்டித்த தாய்!

ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் ஓட்டமாவடியில் இடம்பெற்றுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட குழந்தை தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்தப் பெண், தனது இளைய குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது, குழந்தையின்அந்தரங்க உறுப்பை துண்டித்துத்துள்ளார்.

குழந்தை கதறி அழவே அயலவர்கள் ஓடிச் சென்று குழந்தையை மீட்டெடுத்து வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குழந்தையின் தாயைக் கைது செய்துள்ளனர். குழந்தையின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.



Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி