மலையகத்தோட்டத் தொழிலாளர்களிற்கு ஆதரவளிக்கும் கிளிநொச்சி மக்கள்!!

கிளிநொச்சியில் மலையகத்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட காரியாலயத்தின் ஏற்பாட்டில் இன்று காலை கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, த.குருகுலராஜா, கரைச்சி பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், கிளிநொச்சி வாழ் மலையக உறவுகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு சில நிமிடங்களில் ஆரம்பித்த மழை தொடர்ச்சியாக இரண்டு மணிநேரம் நீடித்த போதும் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என கோரி தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி