பேருந்து மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு!!

கண்டி, பொல்கொல்ல பிரதேசத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு பயணிகள் பேருந்து மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு திட்டம் தீட்டியமை மற்றும் உதவியமை ஆகிய குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கிய நான்கு தமிழர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதி கண்டி பொல்கொல்ல பகுதியில் பயணிகள் பேருந்து மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் மூன்று பெண்கள் பலியாகினர்.

இந்த சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபர் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி அதனை 5 ஆண்டுகளில் அனுபவிக்க வேண்டும் எனவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபயகோன் உத்தரவிட்டுள்ளார்.

இதனை தவிர குற்றவாளிகளுக்கு தலா 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி