கிராமத்தின் திறப்பு விழா! உருவான இளஞ்செழியன் புரம்!!

பண்டாரவளை, பூணாகலை அம்பிட்டிகந்த தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 157 தனி வீடுகளைக் கொண்ட இளஞ்செழியன் புரம் கிராமத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றுள்ளது.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் 20 கோடி ரூபா செலவில் இக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் உள்ளிட்டோர் பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து, வீடுகளை திறந்து வைத்துள்ளதோடு, வீட்டு உரிமையாளர்களுக்கு காணி உறுதிப் பத்திரத்தையும் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ஹரிண் பெர்னாண்டோ, ரவீந்திர சமரவீர, இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன், பிரதி அமைச்சர் பைசால் காசீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ் மற்றும் அ.அரவிந்தகுமார் முதலானோர் கலந்து கொண்டுள்ளனர்.
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி