அந்தமான் தீவுகளில் ஏற்ப்பட்டுள்ள நிலநடுக்கம்!! இலங்கைக்கும் ஆபத்தா??

அந்தமான் தீவுகளில் நேற்று மாலை 7 மணியளவில், திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

5.0 ரிச்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வங்காள விரிகுடா கடற்பகுதியில் சுமார் 300 தீவுகளை கொண்டதாக அந்தமான் தீவு காணப்படுகின்றது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் லேசான அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளதுடன், இதுவரையில் நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அதிகாலை இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தை அடுத்து சுனாமி பேரவலம் ஏற்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்தும் ஏற்படும் இந்த அனர்த்தம் காரணமாக இலங்கைக்கும் பாதிப்பு ஏற்படலாம் என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எனினும் இலங்கைக்கு தற்போது சுனாமி ஆபத்து இல்லை என்றும் அது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் இலங்கை வளிமண்டவியல் திணைக்களம் நேற்று சிறப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி