பாரிய எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம்!!

நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு எதிராக எதிர்வரும் ஒன்பதாம் திகதி நாடாளுமன்றத்தில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடி, தேர்தல் ஒத்திவைக்கப்படுவது, முக்கிய பிரமுகர்களின் கொலை சதித்திட்டம் ஆகியவற்றுடன் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை உட்பட பல விடயங்கள் சம்பந்தமாக எதிர்ப்பை முன்வைக்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினைகள் சம்பந்தமாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கேள்வி எழுப்ப உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தவிர மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சம்பந்தமாக பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு, அமைச்சரவை ஊடாக தீர்வை வழங்குவதற்கு பதிலாக தேர்தலை ஒத்திவைக்க எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி