ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து பணியாற்றினால் நாடு முன்னேறும்!!

எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியோ, டி.எஸ்.சேனாநாயக்கவின் ஐக்கிய தேசியக்கட்சியோ தற்போது இல்லை என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட விடயம் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பேலியகொடை மீகஹாவத்தை ஸ்ரீ தர்மாராம விகாரையில் இன்று நடைபெற்ற தாய்நாட்டு இளைஞர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மிகப் பெரிய பொறுப்புள்ளது. இவர்கள் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இன்னும் ஒன்றரை வருடங்கள் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றினால், நாட்டை மேலும் முன்னேற்ற முடியும்.

எனினும் இவர்களின் இணைப்பை உடைக்க சில அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றனர். அரசியல்வாதிகள் எப்போதும் அதிகாரத்திற்கு வரவே முயற்சிப்பார்கள்.

பண்டாரநாயக்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தற்போது இல்லை. அதேபோல் டி.எஸ்.சேனாநாயக்கவின் ஐக்கிய தேசியக்கட்சியும் தற்போது இல்லை. காலத்திற்கு காலம் கட்சிகளில் மாற்றங்கள் ஏற்படும்.

இதனை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனினும் ஆரம்பகால நோக்கங்களுடன் அனைத்து கட்சிகளும் முன்னோக்கி செல்வது முக்கியமானது.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.




Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி